back to top
HomeTamilசீராக்கின் ஞானம் அதிகாரம் - 29 - திருவிவிலியம்

சீராக்கின் ஞானம் அதிகாரம் – 29 – திருவிவிலியம்

சீராக்கின் ஞானம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

கடன்

1இரக்கம் காட்டுவோர் தமக்கு

அடுத்திருப்பவருக்குக்

கடன் கொடுக்கின்றனர்;

பிறருக்கு உதவி வெய்வோர்

கட்டளைகளைக் கடைப்பிடிக்கின்றனர்.

2அடுத்திருப்பவருக்கு அவருடைய

தேவைகளில் கடன் கொடு;

உரிய காலத்தில் பிறருடைய

கடனைத் திருப்பிக்கொடு.

3சொல் தவறாதே;

அடுத்தவர் மீது நம்பிக்கை வை;

உனக்குத் தேவையானதை

எப்போதும் நீ கண்டடைவாய்.

4வாங்கின கடனைக்

கண்டெடுத்த பொருள்போலப்

பலர் கருதுகின்றனர்;

தங்களுக்கு உதவியோருக்குத்

தொல்லை கொடுக்கின்றனர்.

5கடன் வாங்கும்வரை

கடன் கொடுப்பவரின்

கையை முத்தமிடுவர்;

அடுத்திருப்பவரின் செல்வத்தைப்

பற்றித் தாழ்ந்த குரலில் பேசுவர்;

திருப்பிக் கொடுக்கவேண்டிய

போது காலம் தாழ்த்துவர்;

பொறுப்பற்ற சொற்களைக் கூறுவர்;

காலத்தின்மேல் குறை காண்பர்.

6அவர்கள் கடனைத் திருப்பிக்

கொடுக்க முடிந்தாலும்

பாதியைக் கொடுப்பதே அரிது.

அதையும் கண்டெடுத்த பொருள்

என்றே எண்ணிக்கொள்வர்;

இல்லையேல்,

கடனைத் திருப்பித் தராமல்

ஏமாற்றிவிடுவர்;

இவ்வாறு தாமாகவே

எதிரியை உண்டாக்கிக் கொள்வர்;

சாபத்தையும் வசைமொழியையும்

திருப்பிக் கொடுப்பர்;

மாண்புக்குப் பதிலாக

இகழ்ச்சியைத் தருவர்.

7பலர் கடன் கொடாமலிருந்தது

தீய எண்ணத்தினால் அன்று;

காரணமின்றி ஏமாற்றப்படலாமோ

என்னும் அச்சத்தினால்தான்.

தருமம்

8தாழ்நிலையில் இருப்போர்

குறித்துப் பொறுமையாய் இரு;

நீ இடும் பிச்சைக்காக அவர்கள்

காத்திருக்கும்படி செய்யாதே.

9கட்டளையைமுன்னிட்டு

ஏழைகளுக்கு உதவிசெய்;

தேவையின்போது அவர்களை

வெறுங்கையராய்த் திருப்பி

அனுப்பாதே.

10பணத்தை உன்

சகோதரர்களுக்காகவோ

நண்பர்களுக்காகவோ செலவிடு;

அழிந்து போகும்படி

அதைக் கல்லுக்கு அடியில்

மறைத்துவைக்காதே.

11உன்னத இறைவனின்

கட்டளைப்படி

உன் செல்வத்தைப் பயன்படுத்து;

அது பொன்னிலும் மேலாக

உனக்குப் பயனளிக்கும்.

12உன் களஞ்சியத்தில்

தருமங்களைச் சேர்த்துவை;

அவை எல்லாத் தீமையினின்றும்

உன்னை விடுவிக்கும்.

13வலிமையான கேடயத்தையும்

உறுதியான ஈட்டியையும்விட

அவை உன் பகைவரை

எதிர்த்து உனக்காகப் போராடும்.

பிணை

14நல்ல மனிதர் தமக்கு

அடுத்திருப்பவருக்குப்

பிணையாய் நிற்பர்;

வெட்கம் கெட்டோர்

அவர்களைக் கைவிட்டுவிடுவர்.

15பிணையாளர் செய்த

நன்மைகளை மறவாதே;

அவர்கள் தங்கள் வாழ்வையே

உனக்காகத் தந்துள்ளார்கள்.

16பாவிகள் பிணையாளர்

செய்த நன்மைகளை

அழிக்கிறார்கள்;

நன்றி கெட்டவர்கள்

தங்களை விடுவித்தவர்களையே

கைவிட்டு விடுவார்கள்.

17பிணையாய் நின்றதால்

செல்வர் பலர் சீரழிந்தனர்;

திரை கடல் போல்

அலைக்கழிக்கப்பட்டனர்.

18அது வலிய மனிதரை

வெளியே துரத்தியது;

அயல்நாடுகளில்

அலையச் செய்தது.

19பயன் கருதித் தங்களையே

பிணையாளர் ஆக்கிக் கொண்ட

பாவிகள் தங்களையே

தீர்ப்புக்கு உட்படுத்திக்

கொள்கிறார்கள்.

20உன்னால் முடிந்தவரை

அடுத்தவருக்கு உதவு;

நீயே விழுந்துவிடாமல்

எச்சரிக்கையாய் இரு.

விருந்தோம்பல்

21வாழ்வின் அடிப்படைத்

தேவைகளாவன;

தண்ணீர், உணவு, உடை,

மானம் காக்க வீடு.

22அடுத்தவர் வீட்டில்

உண்ணும் அறுசுவை

உணவைவிடத் தன்

கூரைக்கு அடியில் வாழும்

ஏழையின் வாழ்வே மேல்.

23குறைவோ நிறைவோ

எதுவாயினும், இருப்பதைக்

கொண்டு மனநிறைவு கொள்;

அப்போது உன் வீட்டாரின்

பழிச்சொற்களை நீ கேட்கமாட்டாய்.

24வீடு வீடாய்ச் செல்வது

இரங்கத்தக்க வாழ்க்கை;

இத்தகையோர் போய்த் தங்கும்

இடத்தில் பேசவும் துணிய

மாட்டார்கள்.

25நீ விருந்தோம்பிப் பருகக்

கொடுத்தாலும் செய்நன்றி

பெறமாட்டாய்; மேலும்,

பின்வரும் கடுஞ் சொற்களையே

கேட்பாய்:

26“அன்னியனே, வா இங்கே;

உணவுக்கு ஏற்பாடு செய்;

ஏதாவது உன் கையில் இருந்தால்

எனக்கு உண்ணக் கொடு.

27அன்னியனே, மாண்புடையோர்

முன்னிலையிலிருந்து வெளியே போ;

என் சகோதரன் என்னுடன்

தங்குகிறான்; எனக்கு வீடு தேவை.”

28வீட்டாரின் கடுஞ்சொல்லும்

கடன் கொடுத்தோரின்

பழிச்சொல்லும் அறிவுள்ள

மனிதரால் தாங்க முடியாதவை.


29:1-7 லேவி 25:35-38; விப 22:25; இச 15:8.
29:9-13 நீமொ 19:27.
29:11 மத் 19:21.
29:23 1 திமொ 6:6-8.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks