back to top
HomeTamilசீராக்கின் ஞானம் அதிகாரம் - 13 - திருவிவிலியம்

சீராக்கின் ஞானம் அதிகாரம் – 13 – திருவிவிலியம்

சீராக்கின் ஞானம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

தீய உறவு

1மையைத் தொடுவோர் தங்களைக்

கறைப்படுத்திக் கொள்வர்;

செருக்குடையோருடன் சேர்ந்து

பழகுவோர் அவர்களைப்

போலவே மாறுவர்.

2உன்னால் சுமக்க முடியாத

சுமைகளைத் தூக்காதே;

உன்னைவிட வலிமை

வாய்ந்தோருடனும் செல்வம்

படைத்தோருடனும் உறவு கொள்ளாதே.

மண்பானைக்கும் இரும்புக்

கொப்பரைக்கும் என்ன தொடர்பு?

கொப்பரையுடன் பானை மோதிச்

சுக்குநூறாகும்.

3செல்வர்கள் அநீதி இழைப்பதுமன்றி

ஏழைகளை இழிவுபடுத்தவும்

செய்வார்கள்; ஏழைகளோ

அநீதிக்கு ஆளாவதோடு

மன்னிப்பும் கேட்கவேண்டும்.

4உன்னால் தங்களுக்குப்

பயன் விளையுமாயின்,

செல்வர் உன்னைச் சுரண்டுவர்;

உனக்கு ஒரு தேவை என்றால்

உன்னைக் கைவிடுவர்.

5நீ வசதியாய் இருக்கும்போது

உன்னோடு ஒட்டி உறவாடுவர்;

உன்னை வெறுமையாக்கி

விட்டுக் கவலையின்றி இருப்பர்.

6உன் உதவி அவர்களுக்குத்

தேவைப்படும் போது

உன்னை ஏமாற்றுவர்;

உன்னைப் பார்த்துப் புன்முறுவல் பூத்து

உனக்கு ஊக்கம் அளிப்பர்;

உன்னிடம் நயந்து பேசி,

“உனக்குத் தேவையானது என்ன?”

எனக் கேட்பர்.

7நீ திகைக்கத் திகைக்க உனக்குப்

பல்சுவை விருந்தூட்டி,

சிறிது சிறிதாக உன்னை

அறவே கறந்து,

இறுதியில் உன்னை

எள்ளி நகையாடுவர்;

பின்னர் உன்னைக் காண

நேர்ந்தால் ஒதுங்கிச் செல்வர்;

உன்னைப் பார்த்துத் தலையாட்டுவர்.

8ஏமாந்து போகாதவாறு

எச்சரிக்கையாய் இரு;

உன் அறிவின்மையால் தாழ்வுறாதே.

9வலியோர் உன்னை

விருந்துக்கு அழைக்கும்போது

ஆர்வம் காட்டாதே;

அப்படியானால் மீண்டும்

மீண்டும் உன்னை அழைப்பர்.

10எதிலும் முந்திக்கொள்ளாதே;

நீ ஒதுக்கப்படலாம்.

தொலைவில் ஒதுங்கி நில்லாதே;

நீ மறக்கப்படுவாய்.

11வலியோரை உனக்கு இணையாக

நடத்த முயலாதே;

அவர்களின் நீண்ட

பேச்சுகளை நம்பாதே.

உன்னை ஆழம் காணவே

அவர்கள் நீண்டநேரம்

பேசுகின்றார்கள்;

அவர்கள் சிரித்துப் பேசுவதும்

உன்னைக் கணிப்பதற்கே.

12இரகசியங்களைக் காப்பாற்றாதோர்

இரக்கமற்றோர்;

உன்னைக் கொடுமைப்படுத்தவும்

சிறைப்படுத்தவும்

அவர்கள் தயங்கமாட்டார்கள்.

13அவற்றைக் காப்பாற்றுவதில்

மிகவும் கவனமாய் இரு;

ஏனெனில் உனது வீழ்ச்சியை

மடியில் கட்டிக்கொண்டு நடக்கிறாய்.

14*[நீ உறங்கும்போது இவற்றைக்

கேட்க நேர்ந்தால் விழித்தெழு;

உன் வாழ்நாள்முழுவதும்

ஆண்டவர்மீது அன்புசெலுத்து;

உன் மீட்புக்காக அவரை மன்றாடு.]

15ஒவ்வோர் உயிரும்

தன் இனத்தின்மீது

அன்பு பாராட்டுகிறது;

ஒவ்வொரு மனிதரும்

தமக்கு அடுத்திருப்பவர்மீது

அன்பு செலுத்துகிறார்.

16உயிரினங்களெல்லாம் தங்கள்

இனங்களோடு சேர்ந்து வாழ்கின்றன;

மனிதரும் தம்மைப்போன்ற

மனிதருடன் இணைந்தே வாழ்கின்றனர்.

17ஓநாய்க்கும் ஆட்டுக்குட்டிக்கும்

உறவு ஏது?

பாவிகளுக்கும்

இறைப்பற்றுள்ளோருக்கும்

தொடர்பு ஏது?

18கழுதைப் புலிக்கும் நாய்க்கும்

இடையே அமைதி ஏது?

செல்வர்களுக்கும் ஏழைகளுக்கும்

இடையே சமாதானம் ஏது?

19காட்டுக் கழுதைகள் பாலைநிலத்தில்

சிங்கங்களுக்கு இரையாகும்;

ஏழைகளைச் செல்வர்கள் விழுங்குவர்.

20இறுமாப்புக் கொண்டோர்

தாழ்ச்சியை அருவருப்பர்;

செல்வர் ஏழைகளை அருவருப்பர்.

21செல்வர் தடுமாறினால்

நண்பர்கள் தாங்குவார்கள்;

எளியோர் விழும்போது

நண்பர்களும் சேர்ந்து

தள்ளி விடுவார்கள்.

22செல்வர் நாத்தவறினால்

அவரைக் காப்பாற்றப் பலர் இருப்பர்;

தகாதவற்றைப் பேசினும்

அவற்றை முறைப்படுத்துவர்.

எளியோர் நாத்தவறினால்

அவர்கள்மீது குற்றஞ் சாட்டுவர்;

அறிவுக்கூர்மையோடு பேசினும்

அவர்களுக்குச் செவிசாய்ப்பார்

யாரும் இலர்.

23செல்வர் பேசும்போது எல்லாரும்

அமைதியாய்க் கேட்பர்;

அவரது பேச்சை வானுயரப் புகழ்வர்.

ஏழை பேசும்போது,

‘இவன் யார்?’ எனக் கேட்பர்;

பேச்சில் தடுமாற்றம் ஏற்படின்,

அவரைப் பிடித்து வெளியே தள்ளுவர்.

24பாவக் கலப்பில்லாத செல்வம் நன்று;

வறுமை தீயது

என இறைப்பற்றில்லாதோரே கூறுவர்.

25மனிதரின் உள்ளம் நன்மைக்கோ

தீமைக்கோ முகத் தோற்றத்தை

மாற்றி விடுகிறது.

26இனிய உள்ளத்தின் அடையாளம்

மலர்ந்த முகம்.

உவமைகளைக் கண்டுபிடிக்கக்

கடும் உழைப்போடு கூடிய

சிந்தனை வேண்டும்.


13:3 நீமொ 18:23.
13:10 நீமொ 25:6-7.
13:17 நீமொ 29:27.
13:19 ஆமோ 8:4.
13:26 நீமொ 15:13.


13:14 [ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுகிறது.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks