HomeTamilதிருப்பாடல்கள் அதிகாரம் - 129 - திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரம் – 129 – திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

1 “என் இளமை முதற்கொண்டே என்னைப் பெரிதும் துன்புறுத்தினார்கள் “- இஸ்ரயேல் மக்கள் சொல்வார்களாக!

2 “என் இளமை முதற்கொண்டே என்னைப் பெரிதும் துன்புறுத்தினார்கள்; எனினும், அவர்கள் என்மீது வெற்றி பெறவில்லை.

3 உழவர் என் முதுகின்மீது உழுது நீண்ட படைச்சால்களை உண்டாக்கினர். “

4 ஆண்டவர் நீதியுள்ளவர்; எனவே, பொல்லார் கட்டிய கயிறுகளை அவர் அறுத்தெறிந்தார்.

5 சீயோனைப் பகைக்கும் அனைவரும் அவமானப்பட்டுப் புறமுதுகிடுவராக!

6 கூரைமேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்கள்; வளருமுன் அது உலர்ந்துபோகும்.

7 அதை அறுப்போரின் கைக்கு, ஒரு பிடி கூடக் கிடைக்காது; அரிகளைச் சேர்த்தால் ஒரு சுமைகூடத் தேறாது.

8 வழிப்போக்கரும் அவர்களைப் பார்த்து, ‘ஆண்டவர் உங்களுக்கு ஆசி வழங்குவாராக!’ என்றோ ‘ஆண்டவரின் பெயரால் ஆசி வழங்குகிறோம்’ என்றோ சொல்லார்.

Pradeep Augustine
Pradeep Augustinehttps://www.getcooltricks.com/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.