Home » Tamil » திருப்பாடல்கள் அதிகாரம் – 122 – திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரம் – 122 – திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
Click the play button to listen or click the Download button to save a copy.

எருசலேமே நீ வாழி!
(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்; தாவீதுக்கு உரியது)

1“ஆண்டவரது இல்லத்திற்குப்

போவோம்”, என்ற அழைப்பை

நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்.

2எருசலேமே! இதோ,

நாங்கள் அடியெடுத்து வைத்து

உன் வாயில்களில் நிற்கின்றோம்.

3எருசலேம் செம்மையாக

ஒன்றிணைத்துக்கட்டப்பட்ட நகர் ஆகும்.

4ஆண்டவரின் திருக்குலத்தார்

அங்கே செல்கின்றனர்;

இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட

கட்டளைக்களுக்கிணங்க

ஆண்டவரது பெயருக்கு அவர்கள்

நன்றி செலுத்தச் செல்வார்கள்.

5அங்கே நீதி வழங்க

அரியணைகள் இருக்கின்றன.

அவை தாவீது வீட்டாரின் அரியணைகள்.

6எருசலேமில்

சமாதானம் நிலைத்திருக்கும்படி

வேண்டிக்கொள்ளுங்கள்;

“உன்னை விரும்புவோர்

வளமுடன் வாழ்வார்களாக!

7உன் கோட்டைகளுக்குள்

அமைதி நிலவுவதாக!

உம் மாளிகைகளில்

நல்வாழ்வு இருப்பதாக!

8உன்னுள் சமாதானம் நிலவுவதாக!” என்று

நான் என் சகோதரர் சார்பிலும்

என் நண்பர் சார்பிலும்

உன்னை வாழ்த்துகின்றேன்.

9நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம்

இங்கே இருப்பதால், உன்னில்

நலம் பெருகும்படி நான் மன்றாடுவேன்.

Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more