Home » திருப்பாடல்கள் அதிகாரம் – 121 – திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரம் – 121 – திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

நம்மைப் பாதுகாக்கும் ஆண்டவர்
(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)

1மலைகளை நோக்கி

என் கண்களை

உயர்த்துகின்றேன்!

எங்கிருந்து எனக்கு உதவி வரும்?

2விண்ணையும் மண்ணையும்
உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே

எனக்கு உதவி வரும்.

3அவர் உம் கால் இடறாதபடி

பார்த்துக் கொள்வார்;

உம்மைக் காக்கும் அவர்

உறங்கிவிடமாட்டார்.

4இதோ! இஸ்ரயேலைக் காக்கின்றவர்

கண்ணயர்வதுமில்லை;

உறங்குவதும் இல்லை.

5ஆண்டவரே உம்மைக் காக்கின்றார்;

அவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்;

அவரே உமக்கு நிழல் ஆவார்!

6பகலில் கதிரவன் உம்மைத் தாக்காது;

இரவில் நிலாவும் உம்மைத் தீண்டாது.

7ஆண்டவர் உம்மை

எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்;

அவர் உம் உயிரைக் காத்திடுவார்.

8நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும்

இப்போதும் எப்போதும்

ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார்.

Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks