Home » திருப்பாடல்கள் அதிகாரம் – 113 – திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரம் – 113 – திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

ஆண்டவரின் கருணை

1அல்லேலூயா!

ஆண்டவரின் ஊழியர்களே,

அவரைப் புகழுங்கள்.

அவரது பெயரைப் போற்றுங்கள்.

2ஆண்டவரது பெயர்

வாழ்த்தப்பெறுவதாக!

இப்பொழுதும் எப்பொழுதும்

வாழ்த்தப்பெறுவதாக!

3கீழ்த்திசை முதல் மேற்றிசைவரை

ஆண்டவரது பெயர் போற்றப்படுவதாக!

4மக்களினங்கள் அனைத்திற்கும்

ஆண்டவர் மேலானவர்;

வானங்களையும்விட உயர்ந்து

அவரது மாட்சி.

5நம் கடவுளாகிய ஆண்டவருக்கு

நிகர் யார்?

அவர்போல வானளாவிய உயரத்தில்

வீற்றிருப்பவர் யார்?

6அவர் வானத்தையும் வையகத்தையும்

குனிந்து பார்க்கின்றார்;

7ஏழைகளைத் தூசியிலிருந்து

அவர் தூக்கி நிறுத்துகின்றார்;

வறியரைக் குப்பை மேட்டிலிருந்து

கைதூக்கி விடுகின்றார்;

8உயர்குடி மக்களிடையே –
தம் மக்களுள் உயர்குடி மக்களிடையே –

அவர்களை அமரச் செய்கின்றார்.

9மலடியை அவள் இல்லத்தில்

வாழ வைக்கின்றார்;

தாய்மைப்பேறு பெற்று மகிழுமாறு

அவளுக்கு அருள்கின்றார்.

அல்லேலூயா!

Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks