Home » திருப்பாடல்கள் அதிகாரம் – 126 – திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரம் – 126 – திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

விடுதலைக்காக மன்றாடல்
(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)

1சீயோனின் அடிமை நிலையை
ஆண்டவர் மாற்றினபோது,

நாம் ஏதோ கனவு
கண்டவர் போல இருந்தோம்.

2அப்பொழுது, நமது முகத்தில்

மகிழ்ச்சி காணப்பட்டது.

நாவில் களிப்பாரவாரம் எழுந்தது;

‟ஆண்டவர் அவர்களுக்கு

மாபெரும் செயல் புரிந்தார்” என்று

பிற இனத்தார் தங்களுக்குள்

பேசிக்கொண்டனர்.

3ஆண்டவர் நமக்கு

மாபெரும் செயல் புரிந்துள்ளார்;

அதனால் நாம்

பெருமகிழ்ச்சியுறுகின்றோம்.

4ஆண்டவரே!

தென்னாட்டின் வறண்ட ஓடையை

நீரோடையாக

வான்மழை மாற்றுவதுபோல,

எங்கள் அடிமை நிலையை

மாற்றியருளும்.

5கண்ணீரோடு விதைப்பவர்கள்

அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்.

6விதை எடுத்துச் செல்லும்போது –

செல்லும்போது – அழுகையோடு

செல்கின்றார்கள்;

அரிகளைச் சுமந்து வரும்போது –

வரும்போது –

அக்களிப்போடு வருவார்கள்.

Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks