திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
◄ 1 .. 11 .. 21 .. 31 .. 41 .. 51 .. 61 .. 71 .. 81 .. 91 .. 101 .. 111 .. 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 .. 150 ►
Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Bishop Arulselvam Rayappan.
இறைமக்களைப் பாதுகாப்பவர்
(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)
1ஆண்டவர்மீது நம்பிக்கை
வைத்துள்ளோர்
சீயோன் மலைபோல் என்றும்
அசையாது இருப்பர்.
2எருசலேமைச் சுற்றிலும்
மலைகள் இருப்பதுபோல,
ஆண்டவர் இப்போதும் எப்போதும்
தம் மக்களைச் சுற்றிலும் இருப்பார்.
3நல்லார்க்கென ஒதுக்கப்பட்ட நாட்டில்
பொல்லாரின் ஆட்சி நிலைக்காது;
இல்லையெனில் நல்லாரும்
பொல்லாதது செய்ய நேரிடும்.
4ஆண்டவரே! நல்லவர்களுக்கும்
நேரிய இதயமுள்ளவர்களுக்கும்
நீர் நன்மை செய்தருளும்.
5கோணல் வழிநோக்கித் திரும்புவோரை
ஆண்டவர் தீயவரோடு சேர்த்து
இழுத்துச் செல்வார்.
இஸ்ரயேலுக்கு நலம் உண்டாவதாக!
Leave a Reply