Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Bishop Arulselvam Rayappan.
சகோதர அன்பின் சிறப்பு
(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல், தாவீதுக்கு உரியது)
1சகோதரர் ஒன்றுபட்டு வாழ்வது
எத்துணை நன்று,
எத்துணை இனியது!
2அது ஆரோனின் தலையினிலே
ஊற்றப் பெற்ற நறுமணத்தைலம்
அவருடைய தாடியினின்று வழிந்தோடி
அவர்தம் அங்கியின் விளிம்பை
நனைப்பதற்கு ஒப்பாகும்.
3அது எர்மோனின் மலைப்பனி
சீயோனின் மலைகள்மேல்
இறங்குவதற்கு ஒப்பாகும்;
ஏனெனில், அங்கிருந்தே என்றுமுள
வாழ்வென்னும் ஆசிதனை
ஆண்டவர் பொழிந்தருள்வார்.




Leave a Reply