திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
புகழ்ச்சிப்பாடல்
(நன்றி நவில்வதற்கான புகழ்ப்பா)
1அனைத்துலகோரே!
ஆண்டவரை ஆர்ப்பரித்து
வாழ்த்துங்கள்!
2ஆண்டவரை
மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்!
மகிழ்ச்சிநிறை பாடலுடன்
அவர் திருமுன் வாருங்கள்!
3ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்!
அவரே நம்மைப் படைத்தவர்!
நாம் அவர் மக்கள்,
அவர் மேய்க்கும் ஆடுகள்!
4நன்றியோடு அவர்தம்
திருவாயில்களில் நுழையுங்கள்!
புகழ்ப்பாடலோடு அவர்தம்
முற்றத்திற்கு வாருங்கள்!
அவருக்கு நன்றி செலுத்தி,
அவர் பெயரைப் போற்றுங்கள்!
5ஏனெனில், ஆண்டவர் நல்லவர்;
என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு;
தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர்.