Home » திருப்பாடல்கள் அதிகாரம் – 15 – திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரம் – 15 – திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

கடவுள் மனிதரிடம் எதிர்பார்ப்பவை
(தாவீதின் புகழ்ப்பா)

1ஆண்டவரே, உம் கூடாரத்தில்

தங்கிடத் தகுதியுள்ளவர் யார்?

உம் திருமலையில் குடியிருப்பவர் யார்?

2மாசற்றவராய் நடப்போரே! —

இன்னோர் நேரியவற்றைச் செய்வர்;

உளமார உண்மை பேசுபவர்;

3தம் நாவினால் புறங்கூறார்;

தம் தோழருக்குத் தீங்கிழையார்;

தம் அடுத்தவரைப் பழித்துரையார்.

4நெறிதவறி நடப்போரை

இழிவாகக் கருதுவர்;

ஆண்டவருக்கு அஞ்சுவோரை

உயர்வாக மதிப்பர்;

தமக்குத் துன்பம் வந்தாலும்,

கொடுத்த வாக்குறுதியை மீறார்;

5தம் பணத்தை வட்டிக்குக் கொடார்;

மாசற்றவருக்கு எதிராகக்

கையூட்டுப் பெறார்; —

இவ்வாறு நடப்போர்

என்றும் நிலைத்திருப்பர்.

Pradeep Augustine Avatar

One response to “திருப்பாடல்கள் அதிகாரம் – 15 – திருவிவிலியம்”

  1. Felix Anand Raj Avatar
    Felix Anand Raj

    Hello sir, can I get this entire Audio Tamil Bible in one copy?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks