Home » எரேமியா அதிகாரம் – 45 – திருவிவிலியம்

எரேமியா அதிகாரம் – 45 – திருவிவிலியம்

எரேமியா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

பாரூக்குக்கு ஆண்டவரின் வாக்குறுதி

1யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிம் ஆட்சியேற்ற நான்காம் ஆண்டில் இறைவாக்கினர் எரேமியா சொன்ன சொற்களை நேரியாவின் மகன் பாரூக்கு ஏட்டுச் சுருளில் எழுதி வைத்த பின்னர், எரேமியா பாரூக்கிடம் கூறிய செய்தியாவது:

2பாரூக்கு! இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் உன்னிடம் இவ்வாறு கூறுகிறார்:

3எனக்கு ஐயோ கேடு! ஏனெனில், ஆண்டவர் எனக்குத் துன்பத்திற்குமேல் துன்பத்தை அனுப்பியுள்ளார்; நான் கடுந்துயரில் ஆழ்ந்து தளர்வுற்றுப்போனேன். எனக்கு நிம்மதியே கிடையாது என்று நீ சொன்னாய்.

4இவ்வாறு நீ அவனிடம் சொல்; ஆண்டவர் கூறுவது இதுவே; நான் கட்டியதை நானே அழிப்பேன்; நான் நட்டதை நானே பிடுங்குவேன். இந்நாடு முழுவதற்கும் இவ்வாறு நிகழும்.

5நீ மகத்தானவற்றை உனக்கெனத் தேடுகிறாயா? அவ்வாறு தேடாதே; ஏனெனில் எல்லா மனிதர்க்கும் நான் தண்டனை அளிக்கப்போகிறேன், என்கிறார் ஆண்டவர். ஆனால் நீ எங்குச் சென்றாலும், அங்கெல்லாம் நான் உன் உயிரைக் கொள்ளைப் பொருளாகக் கொடுப்பேன்.


45:1 2 அர 24:1; 2 குறி 36:5-7; தானி 1:1-2.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks