10அப்போது நான், “ஆ! என் தலைவராகிய ஆண்டவரே! நீர் இம்மக்களையும் எருசலேமையும் முற்றிலும் ஏமாற்றிவிட்டீர்; ஏனெனில் வாள் எங்கள் தொண்டைமீது இருக்கும்போதே ‘உங்களுக்குச் சமாதானம்’ என்கிறீர்” என்றேன்.
11அக்காலத்தில் இம்மக்களுக்கும் எருசலேமுக்கும் இவ்வாறு கூறப்படும்; பாலை நிலத்தின் மொட்டை மேடுகளிலிருந்து அனல்காற்று என் மகளாகிய மக்கள்மீது வீசும். அது தூற்றுவதற்கும் தூய்மைப்படுத்துவதற்குமான காற்றன்று.
12அதைவிடப் பெரும் காற்று ஒன்று என்னிடமிருந்து வருகின்றது. இப்போது நானே அவர்கள் மேல் தண்டனைத் தீர்ப்பு வழங்கப் போகிறேன்.
13இதோ, மேகங்களைப் போல் எதிரி வருகிறான். அவன் தேர்கள் சூறாவளி போன்றவை; அவன் குதிரைகள் கழுகுகளைவிட விரைவாகச் செல்பவை; நமக்கு ஐயோ கேடு! நாம் அழிந்தோம்.
14எருசலேமே, நீ விடுவிக்கப்பட வேண்டுமானால், உன் இதயத்திலிருந்து தீயதைக் கழுவி விடு; இன்னும் எத்துணைக் காலத்திற்குத் தீய சிந்தனைகள் உன்னில் குடி கொண்டிருக்கும்?
16‘தொலை நாட்டிலிருந்து உன்னை முற்றுகையிடுவோர் வருகின்றனர்; யூதாவின் நகர்களுக்கு எதிராகப் போர்க் குரல் எழுப்புகின்றனர்’ என மக்களினங்களை எச்சரியுங்கள். இதை எருசலேமுக்கு அறிவியுங்கள்.
17வயல்வெளியின் காவலாளியென, அவர்கள் அவளைச் சுற்றி வளைத்து எதிர்த்து நிற்கின்றனர். ஏனெனில் அவள் எனக்கு எதிராகக் கலகம் செய்தாள், என்கிறார் ஆண்டவர்.
18உன் நடத்தையும் உன் செயல்களும் இவற்றை உன்மேல் வருவித்தன. உனக்கு வந்த இக்கேடு எத்துணைக் கசப்பாய் உள்ளது? அது உன் இதயத்தையே நொறுக்கி விட்டது.
Pradeep Augustine is the founder of Catholic Gallery, a faith-driven platform sharing Mass Readings in multiple languages, prayers, quotes, catechism, Bible plans, reflections, and other spiritual resources since 2013. He manages the website and the official Android/iOS apps alongside his professional career (Read his story).
Stay connected with him on the official social profiles below.
Leave a Reply