7. இயேசு துன்புற்று இறந்து உயிர்த்தெழுதலும் விண்ணேற்றமடைதலும்
இயேசுவைக் கொல்லச் சதித் திட்டம்
(மத் 26:1-5, 14-16; மாற் 14:1-2, 10-11; யோவா 11:45-53)
1அப்போது பாஸ்கா என்னும் புளிப்பற்ற அப்ப விழா நெருங்கி வந்தது.
2தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞரும் இயேசுவை எவ்வாறு கொலை செய்யலாமென்று வழி தேடிக்கொண்டிருந்தனர்; ஏனெனில், மக்களுக்கு அஞ்சினர்.
3அந்நேரத்தில் பன்னிருவருள் ஒருவனான யூதாசு எனப்படும் இஸ்காரியோத்துக்குள் சாத்தான் புகுந்தான்.
4யூதாசு தலைமைக் குருக்களிடமும் காவல் தலைவர்களிடமும் சென்று அவர்களுக்கு இயேசுவைக் காட்டிக்கொடுப்பது பற்றிக் கலந்து பேசினான்.
5அவர்கள் மகிழ்ச்சியுற்று அவனுக்குப் பணம் கொடுக்க உடன்பட்டார்கள்.
6அவனும் அதற்கு ஒத்துக்கொண்டு மக்கள் கூட்டம் இல்லாதபோது, அவர்களிடம் அவரைக் காட்டிக் கொடுப்பதற்கு வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்தான்.
பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடுசெய்தல்
(மத் 26:17-25; மாற் 14:12-21; யோவா 13:21-30)
7புளிப்பற்ற அப்ப விழாக்கொண்டாடும் நாளும் வந்தது. அன்றுதான் பாஸ்கா ஆடு பலியிடப்பட வேண்டும்.
8இயேசு பேதுருவிடம் யோவானிடமும்,
9அதற்கு அவர்கள், “நாங்கள் எங்கே ஏற்பாடு செய்ய வேண்டுமென நீர் விரும்புகிறீர்?” என்று கேட்டார்கள்.
10இயேசு அவர்களிடம்,
11அந்த வீட்டின் உரிமையாளரிடம், ‘நான் என் சீடர்களோடு பாஸ்காவிருந்து உண்பதற்கான அறை எங்கே? என்று போதகர் உம்மிடம் கேட்கச் சொன்னார்’ எனக் கூறுங்கள்.
12
13அவர்கள் சென்று தங்களுக்கு அவர் சொல்லியவாறே அனைத்தையும் கண்டு, பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.
ஆண்டவரின் திருவிருந்து
(மத் 26:26-30; மாற் 14:22-26; 1 கொரி 11:23-25)
14நேரம் ஆனதும் இயேசு திருத்தூதரோடு பந்தியில் அமர்ந்தார்.
15அப்போது அவர் அவர்களை நோக்கி,
16
17பின்பு, அவர் கிண்ணத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களிடம்,
18
19பின்பு அவர் அப்பத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து,
20அப்படியே உணவு அருந்திய பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து,
21என்னைக் காட்டிக்கொடுப்பவன் இதோ, என்னோடு பந்தியில் அமர்ந்திருக்கிறான்.
22
23அப்பொழுது அவர்கள், “நம்மில் இச்செயலைச் செய்யப் போகிறவர் யார்” என்று தங்களுக்குள்ளே கேட்கத் தொடங்கினார்கள்.
யார் பெரியவர்?
24மேலும், தங்களுக்குள்ளே பெரியவராக எண்ணப்பட வேண்டியவர் யார் என்ற விவாதம் அவர்களிடையே எழுந்தது.
25இயேசு அவர்களிடம்,
26ஆனால், நீங்கள் அப்படிச் செய்யலாகாது. உங்களுள் பெரியவர் சிறியவராகவும் ஆட்சிபுரிபவர் தொண்டு புரிபவராகவும் மாற வேண்டும்.
27யார் பெரியவர்? பந்தியில் அமர்ந்திருப்பவரா? அல்லது பணிவிடை புரிபவரா? பந்தியில் அமர்ந்திருப்பவர் அல்லவா? நான் உங்கள் நடுவே பணிவிடை புரிபவனாக இருக்கிறேன்.
28நான் சோதிக்கப்படும்போது என்னோடு இருந்தவர்கள் நீங்களே.
29என் தந்தை எனக்கு ஆட்சியுரிமை கொடுத்திருப்பது போல நானும் உங்களுக்குக் கொடுக்கிறேன்.
30ஆகவே, என் ஆட்சி வரும்போது நீங்கள் என்னோடு பந்தியில் அமர்ந்து உண்டு குடிப்பீர்கள்; இஸ்ரயேலின் பன்னிரு குலத்தவருக்கும் தீர்ப்பு வழங்க அரியணையில் அமர்வீர்கள்.
பேதுரு மறுதலிப்பார் என முன்னறிவித்தல்
(மத் 26:31-35; மாற் 14:27-31; யோவா 13:36-38)
31“சீமோனே, சீமோனே, இதோ கோதுமையைப்போல் உங்களைப் புடைக்கச் சாத்தான் அனுமதி கேட்டிருக்கிறான்.
32
33அதற்கு பேதுரு, “ஆண்டவரே, உம்மோடு சிறையிடப்படுவதற்கும் ஏன், சாவதற்கும் நான் ஆயத்தமாய் உள்ளேன்” என்றார்.
34இயேசு அவரிடம்,
பணப்பையும் வாளும்
35இயேசு சீடர்களிடம்,
36அவர் அவர்களிடம்,
37
‘கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்’
38அவர்கள் “ஆண்டவரே, இதோ! இங்கே இரு வாள்கள் உள்ளன” என்றார்கள். இயேசு அவர்களிடம்,
ஒலிவ மலையில் இயேசு
(மத் 26:36-46; மாற் 14:32-42)
39இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தம் வழக்கப்படி ஒலிவ மலைக்குச் சென்றார். சீடர்களும் அவரைப் பின் தொடர்ந்தார்கள்.
40அந்த இடத்தை அடைந்ததும் அவர் அவர்களிடம்,
41பிறகு அவர் அவர்களை விட்டுக் கல்லெறிதூரம் விலகிச் சென்று, முழந்தாள்படியிட்டு, இறைவனிடம் வேண்டினார்:
42
43[அப்போது விண்ணகத்திலிருந்து ஒரு தூதர் அவருக்குத் தோன்றி அவரை வலுப்படுத்தினார்.
44அவரோ மிகுந்த வேதனைக்குள்ளாகவே, உருக்கமாய் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். அவரது வியர்வை பெரும் இரத்தத் துளிகளைப் போலத் தரையில் விழுந்தது.]*
45அவர் இறைவேண்டலை முடித்துவிட்டு எழுந்து சீடர்களிடம் வந்தபோது அவர்கள் துயரத்தால் சோர்வுற்றுத் தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார்.
46அவர்களிடம்,
இயேசுவைக் காட்டிக் கொடுத்தலும் கைதுசெய்தலும்
(மத் 26:47-56; மாற் 14:43-50; யோவா 18:3-11)
47இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, இதோ! மக்கள் கூட்டமாய் வந்தனர். பன்னிருவருள் ஒருவனான யூதாசு என்பவன் அவர்களுக்குமுன் வந்து அவரை முத்தமிட நெருங்கினான்.
48இயேசு அவனிடம்,
49அவரைச் சூழ நின்றவர்கள் நிகழப்போவதை உணர்ந்து, “ஆண்டவரே, வாளால் வெட்டலாமா?” என்று கேட்டார்கள்.
50அப்பொழுது அவர்களுள் ஒருவர் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய வலக் காதைத் துண்டித்தார்.
51இயேசு அவர்களைப் பார்த்து,
52அவர் தம்மிடம் வந்த தலைமைக் குருக்களையும் கோவில் காவல் தலைவர்களையும் மூப்பர்களையும் பார்த்து,
53
பேதுரு மறுதலித்தல்
(மத் 26:57-58, 69-75; மாற் 14:53-54, 66-72; யோவா 18:12-18, 25-27)
54பின்னர், அவர்கள் இயேசுவைக் கைதுசெய்து இழுத்துச் சென்று தலைமைக் குருவின் வீட்டுக்குக் கொண்டு போனார்கள். பேதுரு தொலையில் அவரைப் பின்தொடர்ந்தார்.
55வீட்டு உள்முற்றத்தின் நடுவில் நெருப்பு மூட்டி, அதைச் சுற்றி அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். பேதுருவும் அவர்களோடு இருந்தார்.
56அப்போது பணிப்பெண் ஒருவர் நெருப்பின் அருகில் அவர் அமர்ந்திருப்பதைக் கண்டு, அவரை உற்றுப்பார்த்து, “இவனும் அவனோடு இருந்தவன்” என்றார்.
57அவரோ, “அம்மா, அவரை எனக்குத் தெரியாது” என்று மறுதலித்தார்.
58சிறிது நேரத்திற்குப்பின் அவரைக் கண்ட வேறு ஒருவர், “நீயும் அவர்களைச் சேர்ந்தவன்தான்” என்றார். பேதுரு, “இல்லையப்பா” என்றார்.
59ஏறக்குறைய ஒரு மணிநேரத்திற்குப்பின்பு மற்றொருவர், “உண்மையாகவே இவனும் அவனோடு இருந்தான்; இவனும் கலிலேயன்தான்” என்று வலியுறுத்திக் கூறினார்.
60பேதுருவோ, “நீர் குறிப்பிடுபவரை எனக்குத் தெரியாது” என்றார். உடனேயே, அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோதே, சேவல் கூவிற்று.
61ஆண்டவர் திரும்பி, பேதுருவைக் கூர்ந்து நோக்கினார்:
62வெளியே சென்று மனம் நொந்து அழுதார்.
இயேசுவை ஏளனம் செய்தல்
(மத் 26:67-68; மாற் 14:65)
63இயேசுவைப் பிடித்துவைத்திருந்தவர்கள் அவரை ஏளனம் செய்து நையப்புடைத்தார்கள்.
64அவரது முகத்தை மூடி, “உன்னை அடித்தவர் யார்? இறைவாக்கினனே, சொல்” என்று கேட்டார்கள்.
65இன்னும் பலவாறு அவரைப் பழித்துரைத்தார்கள்.
தலைமைச் சங்கத்தின் முன்னிலையில் இயேசு
(மத் 26:59-66; மாற் 14:55-64; யோவா 18:19-24)
66பொழுது விடிந்ததும் மக்களின் மூப்பர்களும் தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞர்களும் கூடிவந்தார்கள்; இயேசுவை இழுத்துச் சென்று தங்கள் மூப்பர் சங்கத்தின்முன் நிறுத்தினார்கள்.
67அவர்கள், “நீ மெசியாதானா? எங்களிடம் சொல்” என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம்,
68நான் உங்களிடம் கேட்டாலும் பதில் சொல்ல மாட்டீர்கள்.
69
70அதற்கு அவர்கள் அனைவரும், “அப்படியானால் நீ இறைமகனா?” என்று கேட்டனர். அவரோ,
71அதற்கு அவர்கள், “இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இவன் வாயிலிருந்து நாமே கேட்டோமே” என்றார்கள்.




Leave a Reply