back to top
HomeTamilதிருப்பாடல்கள் அதிகாரம் - 146 - திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரம் – 146 – திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

மீட்பராம் கடவுள் போற்றி!

1அல்லேலூயா! என் நெஞ்சே!

நீ ஆண்டவரைப் போற்றிடு;

2நான் உயிரோடு உள்ளளவும்

ஆண்டவரைப் போற்றிடுவேன்;

என் வாழ்நாளெல்லாம் என் கடவுளைப்

புகழ்ந்து பாடிடுவேன்.

3ஆட்சித் தலைவர்களை நம்பாதீர்கள்;

உன்னை மீட்க இயலாத

மானிட மக்களை நம்ப வேண்டாம்.

4அவர்களின் ஆவி பிரியும்போது

தாங்கள் தோன்றிய மண்ணுக்கே

அவர்கள் திரும்புவார்கள்;

அந்நாளில் அவர்களின் எண்ணங்கள்

அழிந்துபோம்.

5யாக்கோபின் இறைவனைத்

தம் துணையாகக் கொண்டிருப்போர்

பேறுபெற்றோர்;

தம் கடவுளாகிய ஆண்டவரையே

நம்பியிருப்போர் பேறுபெற்றோர்.

6அவரே விண்ணையும் மண்ணையும்

கடலையும் அவற்றிலுள்ள யாவற்றையும்

உருவாக்கியவர்;

என்றென்றும் நம்பிக்கைக்கு

உரியவராய் இருப்பவரும் அவரே!

7ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான

நீதியை நிலைநாட்டுகின்றார்;

பசித்திருப்போர்க்கு

உணவளிக்கின்றார்;

சிறைப்பட்டோர்க்கு

விடுதலை அளிக்கின்றார்.

8ஆண்டவர் பார்வையற்றோரின்

கண்களைத் திறக்கின்றார்;

தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்;

நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார்.

9ஆண்டவர் அயல் நாட்டினரைப்

பாதுகாக்கின்றார்;

அனாதைப் பிள்ளைகளையும்

கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்;

ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக்

கவிழ்த்துவிடுகின்றார்.

10சீயோனே! உன் கடவுள், என்றென்றும்,

எல்லாத் தலைமுறைகளுக்கும்

ஆட்சி செய்வார். அல்லேலூயா!


146:6 திப 4:24; 14:15.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks