திருப்பாடல்கள் அதிகாரம் – 13 – திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரங்கள்

1 .. 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 .. 40 .. 50 .. 60 .. 70 .. 80 .. 90 .. 100 .. 110 .. 120 .. 130 .. 140 .. 150
Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

1 ஆண்டவரே, எத்தனை நாள் என்னை மறந்திருப்பீர்? இறுதிவரை மறந்துவிடுவீரோ? இன்னும் எத்தனை நாள் உமது முகத்தை எனக்கு மறைப்பீர்?

2 எத்தனை நாள் வேதனையுற்று எனக்குள் போராடுவேன்? நாள் முழுதும் என் இதயம் துயருறுகின்றது; எத்தனை நாள் என் எதிரி எனக்கெதிராய் மேலோங்கி நிற்பான்?

3 என் கடவுளாகிய ஆண்டவரே, என்னைக் கண்ணோக்கி எனக்குப் பதில் அளித்தருளும்; என் விழிகளுக்கு ஒளியூட்டும்.

4 அப்பொழுது, நான் சாவின் உறக்கத்தில் ஆழ்ந்து விடமாட்டேன்; என் எதிரி, ‘;நான் அவனை வீழ்த்திவிட்டேன்’ என்று சொல்லமாட்டான்; நான் வீழ்ச்சியுற்றேன் என்று என் பகைவர் அக்களிக்கவுமாட்டார்.

5 நான் உமது பேரன்பில் நம்பிக்கை வைத்திருக்கின்றேன்; நீர் அளிக்கும் விடுதலையால் என் இதயம் களிகூரும்.

6 நான் ஆண்டவரைப் போற்றிப் பாடுவேன்; ஏனெனில், அவர் எனக்கு நன்மை பல செய்துள்ளார்.

Free Email Updates !
Join the visitors who are receiving our newsletter and receive the Daily Mass Readings, Prayers and other updates directly in your inbox.
We respect your privacy and take protecting it seriously.